எந்தவகையிலாவது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கனும் அதே சமயம் படஹ்திற்கும் பொருத்தமான டைட்டிலாக இருக்கணும் என இந்த இயக்குனர்கள் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா கதைக்கு கூட இவர்கள் இந்த அளவு மேனக்கெடுவார்களா என்பது சந்தேகம் தான்.. அந்தவகையில் தற்போது ‘கோம்பே’ என ஒரு படத்திற்கு டைட்டில் வைத்து படத்தின் ஆடியோ ரிலீசையும் நடத்திவிட்டார்கள்..
சரி.. அது என்ன ‘கோம்பே’ன்னு வித்தியாசமா ஒரு டைட்டில்…? தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது தான் இந்தப் படத்தின் அடி நாதம்.
தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான் ‘கோம்பே’. காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம்.
முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஹிரோவாக “சார்லஸ்” ஹிரோயினாக “தீர்த்தா” நடித்திருக்கிறாரகள். T.ராஜேந்தர் பாணியில் கதை, ஒளிப்பதிவு, DI, எடிட்டிங் ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் “ஹாபிஸ் இஸ்மாயில்” மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடித்து கலக்கியிருக்கிறாராம்.