ராமநாதபுரத்தில் முதல் ‘கொம்பன்’ உலா ஆரம்பம்..!


‘அட்டகத்தி’ ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து முடித்துவிட்ட கார்த்தி, அடுத்து ‘கொம்பன்’ படத்திற்காக இயக்குனர் ‘குட்டிப்புலி’ முத்தையாவுடன் ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளார். இன்று படப்பிடிப்பு முழுவீச்சுடன் இனிதே துவங்கிவிட்ட்து.

கார்த்தி ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். ராமநாதபுரம் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அங்கேயே நடைபெற இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு வேல்ராஜ். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜாவும் இணை தயாரிப்பாளர்களாக எஸ்.ஆர்.பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்..

Actor RajkiranDirector MuthaiahKarthiKomban MovieLakshmi MenonVelrajகொம்பன்