நயன்தாராவின் சம்மதம் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ தயாரிப்பாளர்..!


பில்லா-2 இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ‘கொலையுதிர் காலம்’.. இந்தப்படத்தை பாலிவுட்டின் மிகப்பெரிய நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.. பாலிவுட்டின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் வைத்து படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் ‘கொலையுதிர் காலம்’ மூலமாக தமிழ்சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளளது.

பாலிவுட்டில் கிட்டத்தட்ட 32 படங்கள் தயாரித்துள்ள இந்த நிறுவனம் தமிழில் நுழைய காரணம் இந்த நிறுவனத்தின் முதலாளியான வாசு பக்னானிக்கு தமிழகம் மீதுள்ள சென்டிமென்ட் தான் காரணம்.. ஆம். இருபது வருடங்களுக்கு முன் தமிழகம் வந்த வாசு பக்னானி, அப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டு இருந்த பிரபு நடித்த ‘சின்ன மாப்ளே’ படத்தை பார்த்தாராம்..

அதுவரை தொழிலதிபராக மட்டுமே இருந்த அவருக்கு நாம் ஏன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யக்கூடாது. என தோன்றியது. உடனே ரைட்ஸ் வாங்கி இந்தியில் அதை ‘கூலி நம்பர் 1’ என்கிற பெயரில் படமாக்கி முதல் படத்திலேயே வெற்றியை ருசித்தார். அதன்பின் திரைப்பட வாழ்வில் அவருக்கு அமோக வளர்ச்சி தான்..

அவரது மகன் கூட தமிழில் த்ரிஷா நடிப்பில் தயாராகி வரும் ‘மோகினி’ படம் மூலமாகத்தான் அறிமுகமாகிறார்.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும், நயன்தாராவை வைத்து பாலிவுட்டில் படம் தயாரிப்பாரா மாட்டாரா என்கிற கேள்வியை எழுப்பியபோது, நான் தயார்.. நயன்தாரா சம்மதம் சொன்னால் போதும் இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிடாலாம் என்கிறார் உறுதியாக. தமிழ் மற்றும் இந்தியில் தயாராகி வரும் கொலையுதிர் காலம்’ படத்தின் இந்தி வெர்ஷனில் கதாநாயகியாக நடிப்பது யார் தெரியுமா..? நம்ம தமன்னா தான்.

கொலையுதிர் காலம்நயன்தாரா