மே 1-ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் என்பது உங்களுக்கு தெரிந்த செய்தி. இப்போது அதற்காக போடப்பட இருக்கும் பிரிண்ட்டுகளின் எண்ணிக்கையிலும் ஒரு சாதனையை படைத்துள்ளது ‘கோச்சடையான்’.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி, சிந்தி, குஜராத்தி, ஜாப்பனிஸ், பெங்காலி, மராத்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதற்காக உலகம் முழுவதுமாக ‘கோச்சடையான்’ படத்திற்கு 3850 பிரிண்டுகள் போடப்பட்டு ரிலீஸாக இருக்கிறது.
இது, உலகம் முழுவதும் ஜாக்கிசான் படங்களுக்கு கிடைத்த திரையரங்குகளை விட எண்ணிக்கையில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் மட்டும் 30 திரையரங்குகளில் கோச்சடையான் படம் திரையிடப்படுகிறதாம்.