‘கோ-2’வுக்காக அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கிய நா.முத்துகுமார்..!

மறைந்த மாமேதை அப்துல் கலாமிற்கு ஒவ்வொருவரும் தங்களது அஞ்சலியையும் சமர்ப்பணங்களையும் காணிக்கையாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிவரும் ‘கோ-2’ படக்குழுவினர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கி அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.இந்தப்பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அப்துல் கலாம் மறைவுக்கு முன்னரே இப்படி காலமின் பொன்மொழிகளை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டிருந்தார்களாம்.. இப்போது ‘உன்னை அறிந்தால்’ என்கிற இந்தப்பாடலை படத்தின் ஓப்பனிங் பாடலாகவே வைத்துள்ளார்களாம். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தை சரத் என்பவர் இயக்குகிறார்.

அப்துல் கலாம்எல்ரெட் குமார்கோ-2நா.முத்துக்குமார்பாபி சிம்ஹா