கிஷோரை பொறுத்தவரை, அது வில்லனோ கதையின் நாயகனோ, அல்லது குணச்சித்திர கதாபாத்திரமோ, தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர் சும்மா காமா சோமாவென, பத்தோடு பதினொன்றாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் தான் வழக்கமான வில்லன் வேடங்களுடன் கதை சொல்ல வரும் இயக்குனர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்கிறார்.
ஆனால் சூப்பர்ஸ்டார் படம் என்றால் அதில் எந்த ரோல் என்றாலும் ஸ்பெஷல் தானே.. இந்தப்பக்கம் ரஜினி, அந்தப்பக்கம் மலையாளத்தில் மோகன்லால் என இரண்டு சூப்பர்ஸ்டார்களின் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வர, வேண்டாமென்றா சொல்வார் கிஷோர்..? இரண்டிற்கும் ஒகே சொல்லிவிட்டார் கிஷோர்.
ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் ‘கபாலி’யில் கிஷோருக்கு கொஞ்சம் நெகடிவ் சாயல் உள்ள கேரக்டர் தானாம். ஆனாலும் ரஞ்சித்தின் படம் என்பதால் கிஷோருக்கான முக்கியத்துவம் கட்டாயம் கிடைக்கும் என நம்பலாம். அதேபோல மோகன்லால் நடிக்கும் ‘புலி முருகன்’ படத்தில் பாரஸ்ட் ஆபீசராக நடிக்கிறார் கிஷோர்.