நன்றாக முன்னேறி வந்துகொண்டிருக்கின்ற இந்த வேளையில் கிஷோருக்கு ஏன் இப்படி எண்ணம் எழுந்தது என்று யோசிக்கவேண்டாம். இதற்கு காரணம் இயக்குனர் ஜெயவேல் தான். அவர் இயக்கியுள்ளா ‘யாத்ரீகன்’ படத்தில் தான் துறவியாக நடிக்கிறார் கிஷோர்..
தமிழ், கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படம் ஒரு துறவியின் பயணத்தை படம்பிடித்து காட்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதை ஆன்மீகப்படம் என்றோ அவார்டுக்காக எடுக்கப்ப்படும் படம் என்றோ நினைத்து விடாதீர்கள்..
இந்தப்படம் த்ரில்லர்-மர்டர் கலந்த திகில் கதையம்சத்துடன் பக்கா கமர்ஷியலாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களில் சுழலும் மாபியாவை பற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளதாம்.