பதினெட்டாம் நூற்றாண்டு கதையில் கிஷோர்..!


நல்ல படங்களில்தான் கிஷோர் நடிப்பார்… அல்லது இவர் நடித்தால் அது நல்ல படமாகத்தான் இருக்கும்… இப்படியொரு ஃபார்முலாவை அண்மைக் காலங்களில் உருவாக்கிய நடிகர் கிஷோராகதான் இருக்கும்.  அதற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் தற்போது ‘இளமி’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கிஷோர்.

சொல்லப்போனால் அவர் இது வரை ஏற்று நடித்திராத வேடம் இது,. பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தை உள்ளடக்கிய கதை என்பதால் கிஷோரின் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த காலகட்டத்தில் பேசப்பட்ட தமிழ் வேறு மாதிரியான உச்சரிப்பாக இருக்கும் என்பதால் கிஷோருக்கு வசனங்களும் அதற்கான அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல காட்சிகளில் அவர் குதிரையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் குதிரையேற்ற பயிற்சியும் அவர் செய்து வருகிறார். இந்தப்படத்தின் கதாநாயகன் யுவனும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்குக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்

Kishoreகிஷோர்