‘கிருமி’ – நோயும் இல்லை..! கருத்தும் இல்லை..!!

 

கிருமி என டைட்டில் வைத்ததால் இது நோய்களை பரப்பும் வைரஸ்களை பற்றிய படமோ, அல்லது சமூகத்திற்கு கருத்து சொல்ல வந்திருக்கும் படமோ என நினைத்து ஜஸ்ட் லைக் that ஒதுங்கி போய்விட வேண்டாம்.. ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் திரில்லர் வகையை சேர்ந்த படம் தான் இந்த ‘கிருமி’..

நல்ல வேலைக்காகக் காத்திருக்கும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள்,  அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள் தான் கதை. இந்தப்படத்தில்’மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பர்மா’ ரேஷ்மி மேனன்தான் நாயகி.

பி.சி.ஸ்ரீராமின் மாணவரான அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை கவனிக்க,  கே இசை அமைக்கிறார். இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் அனுசரண் என்பவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள், மியூசிக் வீடியோக்களும் இயக்கியுள்ளார்.

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் சுமார் 24 வருடங்கள் உதவியாளராக இருந்த ஜெயராமன் தற்போது இந்த ‘கிருமி’படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் படம் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

அனுசரண்அருள் வின்சென்ட்கதிர்கிருமிகேபர்மாமதயானைக்கூட்டம்ரேஷ்மி மேனன்