‘குமாரு’க்கு வழிவிட்ட ‘சைத்தான்’ ; தனியாக கத்தி சண்டை போடும் விஷால்..!

ரூபாய் நோட்டுக்களில் நம் பிரதமர் கொண்டுவந்த அதிரடி மாற்றம் திரையுலகிற்கு கசாய மருந்து கொடுத்தது போல ஆகிவிட்டது.. பிரதமரின் இந்த நடவடிக்கையை திரையுலகத்தினர் அனைவரும் வரவேற்றாலும், நடைமுறை சிக்கலில் அவர்களது படங்களும் சிக்கித்தவிக்கத்தான் செய்கின்றன.

அதன்படி கடந்த வாரமே வெளியாகவேண்டிய ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ஒரு வாரம் தள்ளிப்போய் இந்த வாரம் (நவ-17) வெளியாகிறது.. இந்த வாரம் வெளியாக வேண்டிய சைத்தான் தனது ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டதாக சொல்லபடுகிறது.. அடுத்தவாரம் (நவ-25) விஷாலின் ‘கத்திச்சண்டை’ வெளியாக இருப்பதால், அதனுடன் மோதாமல் இன்னும் ஒருவாரம் ‘சைத்தான்’ ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றே தெரிகிறது.

Kathi SandaiKIKSaithanVijay AntonyVishal