செல்போனில் மிரட்ட காத்திருக்கும் பேய்..!

நம் தமிழ் சினிமாவில் வழக்கமான பேய்ப்படங்களில் இடம்பெறும் எந்த கிளிஷேக்களும் இல்லாமல் ஒரு பேய் படம் விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தின் பெயர் ‘கேக்காமலே கேட்கும்’. ஆம்.. இந்தப்படத்தில் பேய் செல்போன் மூலம் மிரட்ட போகிறது. வழக்கமான பேய் படங்கள் போல இரவு காட்சிகள், ரத்தம் சிந்துவது, தேவையில்லாத காட்சிகள் இல்லையாம்.

இந்தப்படத்தை கன்னட இயக்குநர் நரேந்திர பாபு இயக்கி உள்ளார். இயக்குனர் கன்னடம் தான் என்றாலும் அவரது அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் . ஆனால் அவரது அப்பா கர்நாடகா. என்பதால் படித்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடக தான். கன்னடத்தில் 5 படங்கள் இயக்கியிருந்தாலும், தமிழில் படம் இயக்குவது இவரது கனவாக இருந்தது.

யாரிடமும் உதவி இயக்குநராக வேலை செய்யாத இவர் தனது ஆஸ்தான குருவாக பாலச்சந்தர், பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியோரை பின்பற்றுகிறார். இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் புலி படத்தின் தயாரிப்பாளர் பி.தி. இசையமைப்பாளர் சிற்பி, தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ketkamale Ketkumகதிரேசன்கேக்காமலே கேட்கும்சிற்பி