கடந்த சில தினங்களுக்கு முன் நிஷாகந்தி புரஸ்காரம் என்ற கேரள அரசின் விருது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய நாட்டுப்புற இசையுடன் மேற்கத்திய இசையின் பல்வேறு அம்சங்களை இணைத்து புதிய வகையில் இசை வகையை இளையராஜா உருவாக்கினார். அந்த இசை, பிரதேசங்களையும், தலைமுறைகளையும் கடந்து பிரபலமாக விளங்குகிறது. அதைப் பாராட்டும் வகையில், அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது
“இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா பெருமை கொள்கிறது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக 1990 ஆம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடெமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும்” என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.