கேரளாவுக்கும் பரத்துக்கும் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றே தெரிகிறது. அதற்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இப்போது ‘1௦௦௦’மும் ஒரு கராணமாக அமைந்திருக்கிறது. ஆம்.. மலையாளத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக பரத் நடித்துவரும் படத்தின் பெயர்தான் ‘1௦௦௦’.
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.சி.நாயர் இயக்கத்தில் சஸ்பென்ஸ் படமாக உருவானாலும் படத்தில் காமெடியும் பிரதானமாக இருக்குமாம். பரத்துடன் மக்பூல் சல்மான், பியான் என இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கிறார்கள்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து பரத் நடித்த ‘கூதரா’ என்கிற படம் கடந்த மே மாதம் தான் வெளியானது. இதுதவிர கடந்த 2௦௦4லேயே பரத் ‘4 ஸ்டூடண்ட்ஸ்’ என்ற மலையாளப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.