‘லீ’, ‘நாணயம்’ படங்களுக்கு பிறகு நல்ல கதை அமையாததால் நீண்ட இடைவெளிவிட்ட சிபிராஜ், இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்திற்கு இப்படி பெயர் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த ராணுவ புலனாய்வு நாய் ஒன்றும் நடிக்கிறது.
சிபிராஜ் நடித்த ‘லீ’ படத்தை தயாரித்த சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு கோவையில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.