‘திருடன் போலீஸ்’ படத்தை எஸ்.பி.பி,சரணுடன் இணைந்து தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடிஎடுத்துவைத்த நிறுவனம் தான் கெனன்யா பிலிம்ஸ்.. இதன் நிறுவனரான செல்வகுமார் பிசினஸ்மேன் என்றாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தாலும், தனது நண்பன் கார்த்திக்ராஜுவை இயக்குனராக்குவதற்காகவும் தயாரிப்பாளராக மாறினார்.
தொடர்ந்து ஒருநாள் கூத்து படத்தை தயாரித்து மரியாதையான வெற்றியையும் கொடுத்த கெனன்யா பிலிம்ஸ் மூன்றாவதாக உள்குத்து படத்தை தயாரித்து ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் மூன்று படங்களிலும் அட்டகத்தி தினேஷ் தான் ஹீரோ என்பதும் ஆச்சர்யமளிக்கிறது..
ஒரு ஹீரோ தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பிலும் நடிக்கிறார் என்றாலே அந்த நிறுவனத்தின் தரம் பற்றி எளிதாக புரிந்து கொள்ளலாம்.. அதுமட்டுமல்லாமல் ஜி.வி.பிரகாஷை வைத்து ‘புரூஸ்லீ’ மற்றும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது… இந்தப்படங்கள் டீசன்டான வெற்றியை தரும் பட்சத்தில் கெனன்யா பிலிம்ஸுக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் உண்டு என்றே தெரிகிறது.