யால் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். . தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகிறது.
மேலும், சமந்தா, நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற மே-9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், “தொடரி’ படம் வெளியான பிறகு, என்னுடைய நடிப்பை சிலர் மட்டுமே பாராட்டினார்கள்.. ஆனால் பலரும் விமர்சனமே செய்தனர். ஆனால், அந்தப்படம் நிச்சயம் எனக்கு ஏதாவது நல்லது செய்யும் என நன் திடமாக நம்பினேன்.. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தப் படத்தில் என்னுடைய திறமையைப் பார்த்து விட்டுத்தான் நாக் அஸ்வின் சாவித்ரியாக நடிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.” என விமர்சனங்களை வெற்றியாக்கிய கதையை நெகிழ்வுடன் பகிர்ந்தார்.