நஸ்ரியாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ்..!


மூன்று வருடங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளம், தமிழ் என இரு மொழிப்பாடமாக வெளியான நேரம் படம், ரிலீஸான தினத்தன்று அது நமக்கு சில முன்னணி நட்சத்திரங்களை தரப்போகிறது என யாராவது நினைத்திருப்பார்களா என்ன..? சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தப்படத்தில் நடித்த நிவின்பாலி இன்று மலையாள சினிமாவின் டாப் ஸ்டாராக இருக்கிறார்.

வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தேசிய விருதெல்லாம் பெற்று வேற லெவலுக்கு போய்விட்டார். படத்தின் கதாநாயகி நஸ்ரியாவும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான். ஆனால் நான்கைந்து படங்கள் நடித்ததுமே அவர் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த இந்த ‘நேரம்’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.. இதில் நஸ்ரியா நடித்த கேரக்டரில் நடிப்பதற்காக தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துவரும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்களாம். கதாநாயகனாக சுதீப் கிஷன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது..

Baapi SimhaKeerthi SureshNazriyaNeram