கிறிஸ்துமஸ் ரிலீஸாக வரும் ‘கயல்’..!

இயக்குனர் பிரபு சாலமன் தனது புதிய படைப்பான ‘கயல்’ திரைப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர்-25 ஆம் தேதி ரலீஸ் செய்கிறார். முந்தைய வெற்றிப்படமான ‘கும்கி’யை வெளியிட்ட ராசியான மாதம் என்பதால் இப்படி ரிலீஸ் செய்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அதற்காகவோ அல்லது பள்ளிக்குழந்தைகளுக்கு தேர்வு விடுமுறை விடப்படுவதாலோ அல்லது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாலோ இந்த டிசம்பர்-25ஆம் தேதியை ரிலீசுக்காக தேர்ந்தெடுக்கவில்லை.

‘கயல்’ படம் சுனாமியின் தாக்குதலை, தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய படம். அதனால் சுனாமி நினைவு தினமான டிசம்பர்-26க்கு முதல் நாள் படத்தை ரிலீஸ் செய்தால் அது உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்பதாலேயே அந்த தேதியில் ரிலீஸ் செய்கிறார். ‘மைனா’, ‘கும்கி’யை தொடர்ந்து பிரபுசாலமனை ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கவைக்குமா ‘கயல்’..?

கயல்கும்கிபிரபு சாலமன்