ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் இலங்கைத்தமிழரான சுபாஷ்கரன்.. ஆனால் அவர் ராஜபக்சேவுக்கு ஆதரவானவர், அதனால் அவர் தயாரிக்கும் ‘கத்தி’ படத்தை வெளியிட விடமாட்டோம் என ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் நேற்று ‘கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திக் காட்டினார் சுபாஷ்கரன்.
மேலும் மேடையில் அவர் பேசும்போது, “எங்களைப்பற்றி உங்களுக்கு சொல்லப்பட்ட தகவல்கள் எல்லாமே பொய்யாக சித்தரிக்கப்பட்டவை.. ரஜினி சார் பாடலில் இருந்து ஒரு வரியை மட்டும் இதற்கு உதாரணமாக சொல்லிக்கொள்கிறேன்.. ‘பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்.. காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்?” என பொட்டில் அடித்தாற்போல பாடி தன்னை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு பதில் கூறினார் சுபாஷ்கரன்.