காமெடியனாக நடிக்க மாட்டேன் என ஐந்து வருடங்களுக்கு முன்பு கடையை சாத்திய வடிவேலு, மீண்டும் களத்தில் குதித்திருக்கும் படம் கத்திச்சண்டை.. இத்தனைக்கும் இந்தப்படத்தின் இயக்குனர் சுராஜுடன் ‘படிக்காதவன்’ படத்தில் முரண்பட்டு விலகிப்போனவர் தான் வடிவேலு.. ஆனாலும் அவரை மீண்டும் அவருடன் இணைய வைத்தது விஷாலும் படத்தின் கதையும் தான்..
கூடவே காமெடிக்கு சூரியும் இருக்கிறார்.. விஷால்-தமன்னா என்கிற புதிய காம்பினேஷன் ரசிகர்களுக்கு உற்சாகம் தருமாம். ‘பாண்டியநாடு’ படத்திற்குப்பின் ஒரு கௌரவமான வெற்றிக்கு காத்திருக்கும் விஷாலுக்கு இந்தப்படத்தில் அனைத்தும் கைகூடி வந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று, தீபாவளிக்கு வெளியாகும் வகையில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறதாம்.