கஸ்தூரி ராஜா இயக்கும் ‘ஒயிலா’..!

கஸ்தூரி ராஜா இயக்கியுள்ள ‘காசு பணம் துட்டு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் ஜி.ஆர். இவர் வேறு யாருமல்ல.. பல வருடங்களுக்கு முன் முரளி நடித்த ‘மனுநீதி’ படத்தை தயாரித்தவர் தான். இது தவிர ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்ல ராசி’ ஆகிய படங்களை தயாரித்தவர். கன்னடத்தில் இவர் தயாரித்த ‘சூப்பர் சாஸ்திரி’ படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்க்கிறது.

தற்போது இவர் தமிழில் ஒரே நேரத்தில் ‘ஒயிலா’, ‘ஓகே ஓகே’ என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இதில் ‘ஒயிலா’ படத்தை கஸ்தூரி ராஜா இயக்க, ஓகே ஓகே’ படத்தை கன்னட இயக்குனர் ரவிராஜா இயக்குகிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப்படங்களிலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.ஆர்.

Enga Raasi Nalla RaasiG RKaasu IrukanumKaasu Panam ThuttuKasthuri RajaManu NeethiOK OKOyilaRavi RajaSuper Sasthri
Comments (0)
Add Comment