குழந்தைகளுக்காக நாடக போடும் கார்த்திக்ராஜா..!

இளையராஜாவின் மூத்த வாரிசான கார்த்திக்ராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் மட்டும் தான் என நினைத்து விடாதீர்கள். அவருக்குள்ளும் ஒரு கதாசிரியன் ஒளிந்திருக்கிறான். அந்த கதாசிரியரியனை வெளிக்கொண்டு வரும் விதமாகத்தான் விரைவில் ‘பட்டணத்தில் பூதம்’ என்கிற நாடகத்தை நடத்த இருக்கிறார் கார்த்திக்ராஜா.

குழந்தைகளுக்காக உருவாகும் இந்த நாடகத்திற்கு கார்த்திக்ராஜா கதை எழுத, பாடலாசிரியர் பா.விஜய் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே அப்சல்யூட் மேஜிக் என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கார்த்திக்ராஜா, முதல் நிகழ்ச்சியாக கடந்த வருடம் மதுரையில் இசைஞானியின் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த வருடம் வரும் செப்-16 முதல் செப்-20 வரை சென்னை மியூசிக் அகாடமியில் இந்த இந்த நாடகத்தை நடத்தவுள்ளார்.

இளையராஜாகார்த்திக்ராஜாட்டணத்தில் பூதம்