3வது படத்தை ‘நாடக மேடை’யாக்கிய கார்த்திக் நரேன்..!

சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது.

அவர் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பை தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் ‘நாடக மேடை’. இப்படத்தை இயக்கி, தனது ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்’ பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்

அரவிந்த்சாமிஆத்மிகாகார்த்திக் நரேன்சந்தீப் கிருஷ்ணாதுருவங்கள் பதினாறுநரகாசுரன்நாடக மேடைநைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்ஸ்ரேயா