அமரன்-2’வை ஆரம்பித்து மீண்டும் ஹீரோவாக மாறிய கார்த்திக்..!

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான படம் தான் அமரன்.. பானுப்ரியா கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவும் கார்த்திக்கும் முதன்முறையாக பின்னணி பாடகர்களாக அறிமுகமான சுவராஸ்யமான நிகழ்வும் நடந்தது.

இப்போது கார்த்திக்கின் பையன் கௌதம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்ட நிலையில், கார்த்திக் கடந்த சில வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு தாவினார்.. சமீபத்தில் வெளியான ‘அநேகன்’ படத்தில் கார்த்திக்ன் மாஸான நடிப்பை பார்த்து பலரும், பழைய கார்த்திக்கை மீண்டும் பார்த்தது போல இருக்கிறது என்று புகழ ஆரம்பித்தார்கள்.

அதனால் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கார்த்திக், இந்த ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளார். அமரன் படத்தை இயக்கிய அதே ராஜேஸ்வர் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். பாடல்களை வைரமுத்து எழுத, கிரிநாத் என்பவர் இசையமைக்கிறார்.

அநேகன்அமரன்கார்த்திக்கிரிநாத்கௌதம் கார்த்திக்பானுப்ரியாராஜேஸ்வர்வைரமுத்து