தற்போது தான் இயக்கிவரும் ‘இறைவி’ படத்தில் பிஸியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்திற்கான கதையை முடித்துவிட்டாராம். இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்… எப்போதுமே புதுமையான காம்பினேஷன்களை விரும்பும் ரசிகர்களுக்கு இது நிச்சயம் மகிழ்சியான செய்தியாகத்தான் இருக்கும்.
லாரன்ஸ் தற்போது ‘பைரவா’ படத்தின் வேலைகளில் இருக்கிறார்.. அனேகமாக இந்தப்படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்குமுன் அஜித்தை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லியிருக்கிறார் என்பது வெறும் வதந்தியாகவே நின்றுபோய், லாரன்ஸின் படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாம்.