“ஸ்டோன் பெஞ்ச்’சின் முதல் கல்லை எடுத்து வைக்கும் கார்த்திக் சுப்புராஜ்..!


தனது அடுத்த படைப்பான ‘இறைவி’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அதன் வேலைகளில் பிசியாக உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதேசமயம் குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முக்கிய இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ் தனது தாய்வீடான குறும்படங்களை மறக்கவும் இல்லை.. அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி நினைக்காமலும் இல்லை.

அதனால் தான் குறும்பட இயக்குனர்களுக்கான எதிர்கால தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக, அவர்களுக்கு குறும்படம் மூலம் வருமானம் கிடைக்கச்செய்யும் விதமாக கடந்த நவம்பரில் ‘பெஞ்ச் ஸ்டோன்’ (bench stone) என்ற நிறுவனத்தை நிறுவனார். அதில் ஒரு பிரிவான ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ மூலம் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் ஆறேழு குறும்படங்களை ஒன்றிணைத்து சுமார் 1௦௦ நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக வெளியிட வகை செய்துள்ளார்.

தற்போது அப்படி முதன் முதலாக ஆறு குறும்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட முதல் படத்தை வரும் மார்ச்-6ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியிடுகிறார். இந்தப்படம் சென்னை, கோவையில் உள்ள சத்யம் மற்றும் பி.வி.ஆர் தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.. இந்த ஆறு குறும்படங்களில் கார்த்திக் சுப்புராஜின் குறும்படமும் உண்டு.

‘பெஞ்ச் ஸ்டோன்’bench stoneKarthik Subbarajஇறைவிகார்த்திக் சுப்புராஜ்பெஞ்ச் பிலிக்ஸ்