தலைப்பை படித்துவிட்டு உடனே தற்போது நடித்துவரும் ‘காளி’ படத்தில் கார்த்திக்கு மெக்கானிக் கேரக்டரா என கேட்டுவிடாதீர்கள்.. இது ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் அல்ல.. கார்த்தி நடித்துவரும் புதிய படத்திற்காக இயக்குனர் ‘அட்டகத்தி’ ரஞ்சித்தின் ஏற்பாட்டில் நடிப்பு பயிற்சி கொடுக்க உருவாக்கப்பட்ட ‘ஒர்க்ஷாப்’.
இந்தப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நிறைய புதுமுகங்களும் படம் நெடுகிலும் அவருடன் பயணிக்க இருக்கின்றனர். கதையோ வடசென்னையை களமாக கொண்டது. அதனால் கார்த்திக்கும் உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு புரிதல் இருக்கவேண்டும் என்பதற்காகவும் அந்த புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகவும் தான் இந்த ஒர்க்ஷாப்.
இந்தப்படத்தில் கார்த்தி வடசென்னையில் பிறந்து வளர்ந்தாலும் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவராக நடிக்கிறார்.