கார்த்தி-ஹாரிஸ் முதன்முறை கூட்டணி..!

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இவர் இயக்குனர் ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் பல படங்களில் இணைந்து பணியாற்றி ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஹாரிஸ் கார்த்தி படத்துக்கு இசையமைப்பது இதுதான் முதல்முறை.

Harrish JayarajKarthiகார்த்திபிரின்ஸ் பிக்சர்ஸ்ரஜத்ஹாரிஸ் ஜெயராஜ்