இன்று ரயில் பயணங்களில் பல்வேறுவிதமான விபத்துகளில் பயணிகள் சிக்குகின்றனர். இவை எல்லாம் அவர்களின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் நிகழ்பவைதான். இதுகுறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது ரயில்வே நிர்வாகம். தனது பிசியான ஷூட்டிங் ஷெட்யூலுக்கு இடையேயும், இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கார்த்தி பேசும்போது, “செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடப்பது, ஓடும் ரயிலில் ஏறுவது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது இவற்றை எல்லாம் அறவே தவிர்க்கவேண்டும். குறிப்பாக ரயிலில் சாகசம் செய்வதி விட்டுவிடவேண்டு.. சினிமாவில் தான் சாகசம் எடுபடும். நிஜத்தில் அல்ல” என ரயில் பயணிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் விதமாக வலியுறுத்தினார் கார்த்தி.