’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘கண்ணிவெடி’ திரைப்படம் தொடங்கியது

ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து பல தரமான படைப்புகளை கொடுப்பதோடு, வெற்றிகரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என மாபெரும் வெற்றி படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு புதுமையான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகிறது ‘கண்ணிவெடி’.

அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கும் அதிரடி திரில்லர் படமான ’கண்ணிவெடி’ திரைப்படத்தில் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பெண்களை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகும் ‘கண்ணிவெடி’ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெருகிய தற்போதைய சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படமாக உருவாக உள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில், ரசிகர்களை விறுவிறுப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் அதிரடியாக நடிக்கிறார். மேலும், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் தனது அசாத்திய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் அவரது வேடம் இப்படத்தில் அமைந்திருக்கிறது.

இப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 14) சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கணேஷ் ராஜ் மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “’கண்ணிவெடி’ திரைப்படம் பரபரப்பான கதை சொல்லல் மற்றும் வலிமையான தொழில்நுட்ப பணிகள் மூலம் ரசிகர்களை கவரக்கூடிய தரமான படமாகவும், திரைப்பட ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு JV மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராக பணியாற்ற PC ஸ்டண்ட்ஸ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

kannivedikannivedi poojaKollywood Newstamil film newstamil movie kannivedi