கண்ணே கலைமானே’ படம் பார்த்து நெகிழ்ந்த திருமாவளவன்..!

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. இந்த காட்சியை தொல்.திருமாவளவன், முத்தரசன் உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர்

‘கண்ணே கலைமானே’ படம் பார்த்து முடித்தவுடான் திருமாவளவன் இந்த படம் குறித்து கூறியதாவது: ‘கண்ணே கலைமானே’ படம் மிகவும் யதார்த்தமானதாக இருக்கிறது. உதயநிதி உட்பட நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தத்துக்குச் சற்றும் மாறாமல் நடித்திருந்தனர். குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜாவின் கிராமத்து இசையும், வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகளும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இது கவித்துவமான திரைப்படம்” என்று பாராட்டியுள்ளார்..

Seenu RamasamyUdhaynidhi stalinஉதயநிதி ஸ்டாலின்கண்ணே கலைமானேசீனு ராமசாமிதிருமாவளவன்