கன்னட இயக்குனரின் ‘காதல் பைத்தியம்’..!


காதலுக்கு பெற்றோர்களோ அல்லது வில்லன்களோ தடையில்லை, காதலர்களே தான் தங்கள் காதலுக்கு பிரச்சனை ஏற்படுத்திக்கொள்கின்றனர் என்ற கருத்தை முன் வைத்து இதுவரை நூறு படமாவது வந்திருக்கும். அந்த வகையில் 101வது படமாக தயாராகி இருக்கிறது ‘காதல் பைத்தியம்’ என்ற படம்.

ஆனால் இதில் முழுக்க முழுக்க கதையமைப்பில் வித்தியாசம் காட்டி படத்தை இயக்கியுள்ளாராம் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள இயக்குனர் மாசந்துரு.. தமிழுக்கு புதுமுகங்கள் என்றாலும் இந்தியில் நடித்த ஆதர்ஷ் மற்றும் கன்னடத்தில் நடித்துள்ள ஜீவிகா (ஜீவிதா இல்லீங்க) ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஆடுகளம் நரேனும் நடித்துள்ளனர்.

 

JeevithaKadhal PaithiyamKadhal Paithiyam Movieகாதல் பைத்தியம்ஜீவிகா