நிஜ பாக்ஸர்களை காமெடியர்களாக மாற்றிய ‘கன்னா பின்னா’..!

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா. இவர் ‘கன்னா பின்னா’ என்கிரா படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.. நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நடித்திருக்கிறார்.

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்தபடம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். ஆனால் பார்ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்களை படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குனர் தியா.

Anjali RaoDiyaKanna PinnaKanna Pinna Movie News