‘கங்காரு’ நாளை மலை இறங்குகிறது..!


உயிர், மிருகம், சிந்துசமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குனர் சாமி அதிலிருந்து வெளிப்படும் விதமாக ‘கங்காரு’ என்ற படத்தை அண்ணன் தங்கை பாசப்போராட்டத்தை மையமாக வைத்து எடுத்துள்ளார். இந்தப்படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி ஜோடியாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கனலில் குளுகுளு க்ளைமேட்டில் நடைபெற்று வருகிறது.

நாளையுடன் படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைத்துவிட்டு மலையை விட்டு கீழே இறங்குகிறது ‘கங்காரு’ டீம். முதல் முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

ArjunaKalabhavan ManiKangarooMirugamR SundarrajanSaamiSrinivasSuresh KamatchiThambi RamaiahUyirVairamuthuVarsha Ashwathy
Comments (0)
Add Comment