“கபடி விளையாடாமல் தடுத்தார் பாலசந்தர்” ; கமல் உடைத்த ரகசியம்..!

புரோ கபடி லீக்கில் இடம்பெறும் எட்டு அணிகளில் ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் தூதராக பொறுப்பேற்றுள்ளார் உலக நாயகன் கமல். கிரிக்கெட் வீரர் சச்சின், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோர் உரிமையாளர்களாக இருக்கும் இந்த அணியின் வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கமல், சச்சின், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம்சரண் ஆகியோர் கலந்துகொண்டனர்.. இந்தநிகழ்வில் பேசிய கமல் தான் கபடி விளையாடுவதில் ஆர்வமாக இருந்ததாகவும், படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் கபடி விளையாடி அடிபட்டதால் ஷூட்டிங் கேன்சலாகி, அதன்பின் இயக்குனர் பாலசந்தர் கபடி விளையாட கூடாது என கூறிவிட்டதாகவும் புதிக தகவலை வெளியிட்டார்.

மேலும் இப்போது ஒருமையில் அழைப்பது பேமஸாகி இருக்கும் நிலையில் தமிழ் தலைவாஸ் என பன்மையில் பெயர் வைத்து இருப்பது சந்தோசம்” என தன்னை விமர்சித்த அமைச்சர் ஒருவருக்கும் மறைமுக பதிலடி கொடுத்தார் கமல்..!

KamalPRO kabadiTamil thalaivasஅல்லு அரவிந்த்அல்லு அர்ஜூன்கமல்சச்சின்புரோ கபடிராம்சரண்