விஷாலின் புதிய பயணத்தை துவக்கி வைத்தார் கமல்..!

விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த முறை நான்கைந்து அணிகள் களத்தில் குதித்திருக்கின்றன.. ஆனால் எதிர்பார்ப்பு எல்லாம் விஷால் உருவாக்கியுள்ள புதிய அணியை பற்றியே இருக்கிறது. தேர்தல் களமும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றதுபோல களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்தார்கள் அல்லவா..? அது குறித்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், ஒருகட்டத்தில் நீதிமன்றத்திடம் தெரிவித்து விட்டு, தான் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கடிதமும் கொடுத்தார்.

ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்காமால் பிகு பண்ணியது.. இப்போது நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உத்தரவிட்டதன் மூலம், விஷாலின் இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது.. இதற்குமுன் தான் களத்தில் இறங்காமல் தனது அணியின் சார்பாக குஷ்புவை தலைவர் பொறுப்புக்கு போட்டியிட வைக்கும் முடிவில் இருந்த விஷால் இப்போது தானே நேரடியாக களத்தில் இறங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்..

இதில் இன்னொரு திடீர் திருப்பமாக விஷாலின் மனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்துள்ளார்.. விஷாலுக்கு கமல் வெளிப்படையாக கொடுத்துள்ள இந்த ஆதரவை கண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோதும் மற்ற அணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

KamalProducer CouncilVishalகமல்தயாரிப்பாளர் சங்கம்விஷால்