ஆந்திராவிற்காக முதன்முறையாக குரல் கொடுக்கிறார் கமல்..!

ஆந்திர ரசிகர்கள் இதுவரை கமலின் படங்களை பார்த்து ரசித்திருக்கிரார்களே தவிர, அவரது குரலை கேட்டதில்லை.. காரணம் தெலுங்கில் கமல் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படும்போது இதுநாள் வரை அவருக்காக டப்பிங் குரல் கொடுத்துவந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்..

ஆனால் இந்தமுறை உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தானே டப்பிங் பேசியிருக்கிறார் கமல்.. முதல்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் என்பதால் தனக்கு திருப்தி வரும் வரை ஒருமுறைக்கு இருமுறையாக கமல் டப்பிங் பேசியபின் தான் திருப்தி அடைந்தாராம் கமல்..

உத்தம வில்லன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்கமல்