பிறந்தநாள் பரிசு தருவார்களா இரு துருவங்களும்..?

கடந்த வருடத்தில் ரஜினி, கமல் இரண்டு பேரின் ரசிகர்களுமே ஏமாற்றத்தை சந்தித்தார்கள்.. காரணம் ‘கோச்சடையான்’ ரஜினி பிறந்தநாளிலும் ‘விஸ்வரூபம்-2’ கமல் பிறந்தநாளிலும் வெளியாகும் என்ற அவர்கள் எதிர்பார்ப்பு வெறும் கனவாகவே போனது.

இதில் ‘கோச்சடையான்’ கூட கிராபிக்ஸ் பணிகள் காரணமாக சில மாதங்கள் தாமதமாக வெளியானது.. ஆனால் ‘விஸ்வரூபம்-2’ பற்றிய பேச்சே இதுவரைக்கும் இல்லை. ஆனால் கடந்தவருடம் போன்றே இருதரப்பு ரசிகர்களும் தங்களது நடிகரின் படம் இந்தவருடம் அவர்கள் பிறந்தநாளன்று வெளியாக வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கமல் பிறந்தநாளான நவம்பர்-7ஆம் தேதி ‘உத்தமவில்லன்’ படமும் டிசம்பர்-13ஆம் தேதி ரஜினியின் ‘லிங்கா’வும் ரிலீசாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ‘உத்தமவில்லன்’ 2௦15ல் தான் வெளியாகும் என படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதேபோல நவம்பர் முதல் வாரத்தில்தான் ‘லிங்கா’ படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அதன்பின்னர் எவ்வளவு விரைவில் பணிகள் நடந்தாலும் டிசம்பர்-13க்குள் ‘லிங்கா’ தயாராகிவிடுமா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் இந்த வருடமாவது இரு துருவங்களும் பிறந்தநாள் பரிசு தருவார்களா? காத்திருப்போம்..

உத்தமவில்லன்கமல்கோச்சடையான்ரஜினிலிங்காவிஸ்வரூபம்-2