மும்மொழிகளில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’..!


தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் படம் முழுக்க நகைச்சுவையால் குலுங்க வைத்தது பல்ராம் நாயுடு என்கிற கேரக்டர் தான் இந்த கதாபாத்திரற்ற்ஹ்தை மறு நினைவூட்டல் செய்யும் விதமாக தனது புதிய படத்திற்கு ‘சபாஷ் நாயுடு’ என பெயர் வைத்திருக்கிறார்.. இந்தப்பெயரை வைக்கும்படி ஐடியா கொடுத்த இசைஞானி இளையராஜாதானாம்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப்படத்திற்கு இன்று நடிகர்சங்கத்தில் வைத்து அமர்க்களமாக பூஜை போட்டார் கமல்.. இந்த விழாவில் கமல், இளையராஜா, டி.கே.ராஜீவ்குமார், ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் சித்திக் என படக்குழுவினருடன், நாசர், விஷால், கார்த்தி என நடிகர்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்..

விழாவின் சிறப்பு நிகழ்வாக இந்தப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் நடிகர் சங்க கட்டட நிதிக்காக தன்னுடைய பங்காக 1 கோடி ரூபாயை வழங்கியது.. நடிகர்சங்க வளாகத்தில் முதன்முதலில் தனது பூஜையை நடத்திய கமல், அதற்கு வாடகையாக 2.5 லட்ச ரூபாய் தொகையையும் பொருளாளர் கார்த்தியிடம் அளித்தார்.

Kamal HasanSabash Naiduகமலஹாசன்சபாஷ் நாயுடு