கடந்த வாராம் தெலுங்கில் வெளியான படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கிய இந்தப்படம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெருமையையும் பெற்றது.
சென்னையில் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்து மனம் நெகிழ்ந்துவிட்டார் கமல். “இந்தப்படம் நாகேஸ்வரராவுக்கு அவரது குடும்பம் செலுத்தியிருக்கும் மிகப்பெரிய காணிக்கை.. நாகேஸ்வரராவின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் அவர் முகத்தை ஸ்கிரீனில் பார்த்ததுமே பழைய ஞாபகங்கள் என் மனதில் அலையடிக்க ஆரம்பித்துவிட்டன.” என படத்தை பாராட்டியுள்ளார் கமல்.