ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.
இப்போது இருக்கும் இந்த சூழ்நிலைதான் தூசிபடிந்து கிடக்கும் மருதநாயகம் படத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சரியான தருணம் என கமலின் நண்பர்கள் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கேற்ற மாதிரி வெளிநாட்டில் வசிக்கும் கமலின் நண்பர்களும் படத்திற்கு தேவைப்படும் தொகையைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளதோடு இந்தப்படம் உங்களது உண்மையான ரசிகர்களுக்கு நீங்கள் தரும் பரிசாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதனால் விஸ்வரூபம்-2 வேலைகளை முடித்துவிட்டு கமல் மருதநாயகமாக மாறுவார் என்று எதிர்பார்க்கலாம்.