பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிப்பதன் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் கௌதமி. படத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் மீனா செய்த கேரக்டராகும்.
படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கௌதமியை பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாராட்டிய கமல், அவரை இத்தனை நாட்களாக பூட்டிவைத்துவிட்டேனே என்கிற குற்ற உணர்வு ஏற்படுகிறது” என வருத்தப்பட்டார்.
மேலும் ஒரு பத்திரிகையாளர் கமலிடம், “உச்ச நடிகரான நீங்கள் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஒரு உச்ச நடிகையை நடிக்கவைக்கவில்லை” என்று கேட்டார். அதற்கு கமல், “கௌதமி தான் என் உச்ச நாயகி” என சொல்ல, கௌதமி முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.