கமல்-விக்ரம் படம் இன்று துவங்கியது

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம்.செல்வா. ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘உத்தமவில்லன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி கமல் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் அடுத்தததாக கமல் தயாரிப்பில் விக்ரமை வைத்து படம் இயக்க போகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகியோர் நடிக்கவும் இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

Anu HassangibhranKamal HassanVikramஅனுஹாசன்கமல்ஹாசன்விக்ரம்