தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவரானார் கல்பாத்தி அகோரம்..!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கல்பாத்தி எஸ்.அகோரம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் கல்பாத்தி எஸ்.அகோரம் ‘திருட்டு பயலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர்..

தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராச பட்டிணம், எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், மாற்றான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். பல படங்களை வினியோகமும் செய்துள்ளார்.

தற்போது தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’, மற்ரும் ஜெயம் ரவி நடிக்கும் படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.
திரைத்துறையில் பிரம்மாண்ட மற்றும் முன்னணி தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள இவர் 2014-15க்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது எந்த இடைவெளியும் இல்லாமல் ஐந்தாவது முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.

AGS EntertainmentKalpathi S AgoramTamilnadu Cricket Councilஅனேகன்ஏ.ஜி.எஸ் எண்டெர்டய்ன்மெண்ட்கல்பாத்தி அகோரம்