கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ் மிக்க நாவல் தான் கள்ளிக்காட்டு இதிகாசம். 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் விதமாக ஆங்கிலம் உட்பட மற்ற 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முடிவெடுத்திருக்கிறது.
இதன் மொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. “இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்” எனறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட இந்த நாவல் இதுவரை ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது.