மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஆஸ்திரேலியா சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டில் திரையிட இப்போதே தேர்வாகியுள்ளது இந்தப்படம். சினிமா பின்னணியை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கு ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த ‘கே’ இசையமைத்திருக்கிறார்.
ரஜினி, கமலை வைத்து படம் இயக்க வேண்டும் அப்போதுதான் தங்களை கனவு முழுமையடையும் என்று கனவுடன் சினிமாவில் வாய்ப்புக்காகப் போராடும் 4 இளைஞர்களின் கதைதான் இது. இந்தப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின். இந்த நால்வரும் தான் படக்குழுவின் பிரதான தூண்களாக இருப்பவர்கள். இவர்களே திரையில் தோன்றும் முக்கிய பாத்திரங்களையும் ஏற்றுள்ளனர்.’ சுட்டகதை’. லட்சுமி பிரியாதான் நாயகி. முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, செந்தில், செப் தாமு ஆகியோரும் நடித்துள்ளனர்
படம் தயாரானதும், இயக்குனர் மிஷ்கின் பார்த்துவிட்டு “சொன்ன மாதிரியே எடுத்திருக்கேடா.. தைரியமா இருடா” என்று சொல்லியிருக்கிறார். அந்த தைரியத்தில் தான் இந்தப்படத்தை சமீபத்தில் இயக்குனர் பாலாவுக்கு போட்டு காட்டினார் வடிவேல்..
“படம் பார்த்து விட்டு வந்தவரிடம் ஆசி வாங்கினேன். அதிகம் பேசாமல் ‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்புக்குச் கிளம்பி சென்றுவிட்டார். மறுநாள் அங்கிருந்து போன் செய்து அரை மணி நேரம் படத்தின். ஒவ்வொரு காட்சியையும் பற்றி சொல்லிப் பாராட்டியதோடு, இது கள்ளப்படமல்ல நல்லபடம்” என்றும் சொல்ல, சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் இயக்குனர் வடிவேல்.