ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளை தரும் இயக்குனர்களில் கரு பழனியப்பனும் ஒருவர்.. இயக்குனராக இருந்த அவர் திடீரென ‘மந்திரப்புன்னகை’ படத்தில் ஹீரோவாகவும் மாறினார். அதன்பின் சில நாட்கள் நடிப்பு பக்கம் போகாமல் இருந்த அவர் மீண்டும் தற்போது ‘கள்ளன்’ படத்தின் கதை நாயகன் ஆகியிருக்கிறார்.
விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை.. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படம் இது. அமீரின் ‘ராம், ‘பருத்தி வீரன்’, ராமின் ‘கற்றது தமிழ்’ என தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சந்திரா என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். தேனி,கம்பம் உள்ளிட்ட தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.