முக்கால் மணி நேர ‘கல்கி’ படத்தில் கிஷோர்..!

நடிப்பு என வந்தபின் அது குறும்படமா பெரும்படமா என பார்ப்பதில்லை நடிகர் கிஷோர்.. நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை உடனுக்கு உடன் ஏற்று நடிப்பதில் மூலம் தன நடிப்பு பசிக்கு நிரந்தரமாக தீனி போட்டுக் கொண்டு இருப்பவர் தான் கிஷோர்.

போதும் இனி விஷயத்துக்கு வருவோம். தற்போது ‘ கல்கி ‘ என்ற 45 நிமிட படத்தில் நடித்துள்ளார் கிஷோர். இந்த படத்தில் கிஷோருக்கு இணையாக நடிப்பவர் யாஸ்மின். புதிய இயக்குனர் திலீப் இயக்க , பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார். “கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் சுருதி. மேலும் இது சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் என்று திரை உலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

KalikiKisoreகல்கிகிஷோர்திலீப்யாஸ்மின்