ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. அதிலும் புதுமுகங்கள் நடித்த சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதை அறிந்த களவாணி சிறுக்கி என்கிற படத்தின் தயாரிப்பாளர் நமச்சிவாயம் என்பவர் புது யுக்தி ஒன்றை கையாளப்போகிறார்.
அதாவது இந்தப்படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் நமச்சிவாயம். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தின் கதை என்ன தெரியுமா..? கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார் இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கலயாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான் . கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது .
அதே நேரத்தில் அந்த ஊரிற்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலர பல பிரச்சனைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு கல்யாணம் நடைபெறுகிறது .முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அரவிந்தை கொன்றது மருதுவா ,கதிரா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் களவாணி சிறுக்கி