சின்னசின்ன வேடங்களில் நடித்து வந்தாலும் சிற்பி போல செதுக்குகின்ற இயக்குனரின் கைகளில் சிக்கினால் அருமையான சிலையாக மாறமுடியும் என்பதற்கு ‘மெட்ராஸ்’ கலையரசன் நல்ல உதாரணம்.. அடுத்ததாக ‘உறுமீன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தர காத்திருக்கிறது சூப்பர்ஸ்டாருடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘கபாலி’.
கேங்ஸ்டர் ரஜினி தனது சண்டைகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு சண்டையில் அநாதையான குழந்தைகளுக்காக ஒரு பள்ளி நடத்துகிறார். ரஜினி நடத்தும் அந்த பள்ளியின் நிர்வாகி திருக்குமரனாக நடித்திருக்கிறார் கலையரசன். கிட்டத்தட்ட படத்தில் ரஜினியின் மகன் மாதிரியான கேரக்டரில் நடித்திருப்பதால் ‘கபாலி’க்கு பிறகு கலையரசன் வீச்சு அதிகமாகவே இருக்கும்.